அவன் காட்டை வென்றான்




பன்றித் தொழுவத்தையும், குடிலையும் விட்டு சினைப் பன்றியைத் தேடி கிழவன் காட்டுக்குள் நுழையும் போதே, காட்டின் நெறி மனித நெறிகளைப் புறக்கணித்துவிடுகிறது. இயற்கையின் தர்கங்களுக்கு முன், விலங்குகளின் தர்கங்களுக்கு முன், மனிதனின் தர்கங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. இலக்குகளற்ற காட்டுப்பாதைப் போலவும், குழப்பமான காலடித் தடங்களைப் போலவும் அலைந்து திரியும் மனிதனுடன் அவனுக்குள் உள்ளிருக்கும் விலங்கு போரிடத் தொடங்குகிறது. காயங்களோடும், ரத்தத்தோடும் போரிடும் அவனுக்கு தோல்விகளைப் பரிசளிக்கிறது. இறுதியில் இரத்தம் தொய்ந்த ஈட்டியை ஊன்று கோலாக்கி தொழுவம் திரும்பும் கிழவன் இருளைக் கிழித்து ஒளியை ஏந்தி வருகிறான்.

“போர் முடிந்துவிட்டது நான் பூரணமாகத் தோற்றுவிட்டேன்” என்று தன்னுள் இருக்கும் விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுப்பதன் வழியே, கிழவன் காட்டை வெல்கிறான்.

“அவன் காட்டை வென்றான்”

- கேசவ ரெட்டி

தமிழில்: ஏ.ஜி. எத்திராஜுலு


Comments