கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா?

தொகுப்பு: வீரான்குட்டி கவிதைகள்
தமிழில்: சுஜா
ஒரு கவிதையை வாசித்து முடிக்கும்போது கவிஞன் விடைபெற்றுக் கொள்கிறான். நல்ல கவிதை அக்கணத்தோடு விடைபெறுவதில்லை. இன்னும் குறிப்பாகச் சொன்னால், அக்கணத்தில்தான் திசைக்கு ஒன்றாகச் சிதறும் பறவைக் கூட்டம் போல சடசடவென மனக்கூட்டிலிருந்து நல்ல கவிதை தன்னை விடுவித்துக் கொண்டு பறக்கத் தொடங்குகிறது.
எனக்கு கவிதை என்பது செல்லோ நரம்புகளில் உயிர்த்தெழும் ஆதூரம். என் மகிழ்ச்சி, துயரம், தனிமை, கொண்டாட்டம் என எல்லா உணர்வுகளோடும் அதன் துடிப்பு ஒன்றிப் போகிறது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கு ஒன்று, துயரின் ஆழத்தில் ஒன்று எனவெல்லலாம் அது தன் நரம்புகளை, தன் அதிர்வுகளை உருமாற்றிக் கொள்வதில்லை.
வீரான்குட்டியின் ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது.
இப்படித்தான். நான் விரும்பும் கவிதைகளுக்கு திசைகள் கிடையாது. எனக்குள் உணர்வெழுச்சிகள் ஏற்படும்போதெல்லாம் நான் கவிதைகளுக்குள் திசையற்று தொலைந்து போகவே விரும்பியிருக்கிறேன். ஏதோ ஒரு கவிதையின் துடிப்புக்குள் ஒளிந்து கொள்ளவே விரும்புகிறேன். செல்லோ நரம்புகளைப் போல அது என் நரம்புகளை மீட்டத் துவங்குகிறது. மொழியற்ற அதன் இசைக்குள் புதைந்து போவது எனக்போகுப் போதுமானதாக இருக்கிறது.

நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்.
இப்படித்தான். நான் விரும்பும் கவிதைகளுக்கு திசைகள் கிடையாது. எனக்குள் உணர்வெழுச்சிகள் ஏற்படும்போதெல்லாம் நான் கவிதைகளுக்குள் திசையற்று தொலைந்து போகவே விரும்பியிருக்கிறேன். ஏதோ ஒரு கவிதையின் துடிப்புக்குள் ஒளிந்து கொள்ளவே விரும்புகிறேன். செல்லோ நரம்புகளைப் போல அது என் நரம்புகளை மீட்டத் துவங்குகிறது. மொழியற்ற அதன் இசைக்குள் புதைந்து போவது எனக்போகுப் போதுமானதாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக மீட்டப்படும் நரம்புகள். ஆயிரம் ஆயிரம் விரல்கள். ஆயிரம் ஆயிரம் இதயங்கள். இவற்றிலிருந்து கனிந்து செறிந்த கனிமம் போல எனக்காய் கவிதைகள் காத்திருக்கின்றன. என் விதி அவற்றை கண்டடைகிறது. மீச்சிறு கணப்பொழுதுதான். அதன் தொன்நெடும் சிலிர்ப்பு சட்டென்று எனக்குள் தொற்றிக் கொள்கிறது.
இன்னொரு கவிதை.
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்:
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று.
கவிதை எனக்குள் இருக்கும் பெரியவைகளை உடைத்து நொறுக்குகிறது. பெரியப் பெரிய அகங்காரங்கள். மேட்டிமைகள் என. என்னிடம் வியப்புக்கு உரிவைகள் என்று ஏதும் இல்லை. கவிதை சிறியவைகளை எனக்கு அறிமுகம் செய்கிறது. சின்னஞ் சிறியவைகள். எனக்கே புலப்படாத அதியற்புதச் சிறியவைகள். சிறு உலகம். சின்னஞ் சிறிய கடல். சின்னஞ் சிறிய மலைகள். எளிதில் தொலைந்து போகும் சிறிய துயரங்கள். குட்டி மலர்களைப் போல சிறிய மகிழ்ச்சிகள். இவை போதும்தானே.
காணும் முன்பு
எத்தனை பெரியவராய் இருந்தோம்
பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறியதானோம்
பேசத் தோடங்கியபோது அற்பமானோம்
இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால்
குறைந்து குறைந்து
இருக்கிறோம் என்றே
சொல்ல முடியாத அளவுக்கு
முழுவதுமாகத் தீர்ந்துவிடுவோமோ
நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது
சாலவும் நன்றல்லவா?
ஒரு கவிதை எனக்குச் செய்யும் அனைத்தும் தெரியும் எனக்கு. இசையைப் போல அது உங்களிடம் பேசும் மொழியில் என்னோடு பேசுவதில்லை. சொற்களுக்கு வெளியே இருக்கின்றன எனக்கான கவிதைகள். பறப்பதற்கு வெளியே இருக்கிறது அதன் வானம்.
யாரும்
காணாதவாறு
நீ செய்து கொண்டிருப்பது அனைத்தும்
தெரியும் எனக்கு
யாரும்
கேட்ட முடியாத மொழியில்
அதைச் சொல்ல முடியாததன்
வருத்தம்தான் எனக்கு
கவிதைகளை என்னால் உணர மட்டுமே முடிகிறது. அதன் இருப்பை, அதன் உள்ளூரத் தீண்டலை, அதன் சிலிர்ப்பை. அறிய மலர்களின் வாசம் போல அது எங்கும் விரவிக் கிடக்கிறது. எனக்கென பிரத்யேகமாய் இசைக்கப்படும் பாடலைப் போல அது எனக்கு மட்டுமாய் பாடுகிறது. ஆயிரம் இசைக் கோர்வைகளுக்கு மத்தியில் என் துடிப்புகளோடு ஒன்றிப்போகும் அதன் அதிர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
கண்ணதாசனின் “உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்ற வரிகளைப்போல…
இன்னொரு கவிதை..
கடற்கரை மணலில்உன் காலடிகள் தேடிக் கொண்டிருந்தேன்காலடிகளுக்கு மேல் காலடிகள்காலடிகளின் சமுத்திரம்!ஆனாலும் கூடயாருமே காண முடியாதபடிஅதில் விரிந்து நிற்கும்தாமரை மொட்டுக்களை கண்டு கண்டுஉன்னைச் சேரும் வழி கண்டடைந்தேன்
எங்கிருந்தோ அது வழங்குகிறது. நான் ஏந்திக் கொள்கிறேன்.

Comments
Post a Comment