பித்து
குணா பித்தன். அவனே பித்தம் உள்ளுறைந்த சிவனும். அந்த பித்தனுக்கு உமையாள் அபிராமி முதன் முறையாக தன் தரிசனம் தருகிறாள்.
“நாயகி! நான்முகி! நாராயணி! கை-நளின பஞ்ச சாயகி!”
ராகதேவன் பாவனி ராகத்தில் விண்ணுலகம் ஏறி இசையின் கதவுகளை நரம்புகள் அதிர திறக்கத் தொடங்குகிறார்.
சாம்பவி! சங்கரி!
சாமளை சாதி நச்சு வாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி
என்று ஆய கியாதி உடையாள்
சரணம்! சரணம் சரணம்!
சரணம்! சரணம் சரணம்!
பித்தனுக்கு திசையெங்கும் கதவுகள் திறக்கின்றன. அபிராமியே அனைத்துமாய் ஆகி நிறைந்து நிற்கிறாள்.
பித்தன் அவளிடம் சரண்டைகிறான். அவன் மனம் சகலங்களிலிருந்தும் தன்னை அவிழ்த்துக் கொள்கிறது. நிச்சலனம் சூழ்கிறது.
ராகதேவன் தன் வாத்தியங்களின் அதிர்வுகளை குறைக்கிறார். யேசுதாஸ் காற்றில் குழையத் தொடங்குகிறார்.
பார்த்த விழி பார்த்த படி
பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காணக் கிடைக்க..
அனைத்தும் உருகிக் கரைகின்றன. நல்லொளி பெருகி நிறைகிறது.
“ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!
மதி வருக, வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!”
இசையும் கனிந்து தழைகிறது.
பிறகென்ன, ஆதி அந்தமுமாய் நிறைந்தவளிடம் கசிந்து உருகியாயிற்று. கடையேன், அடியேன் என கனிந்து பணிந்த மனதின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் காதலும், காமமும் திரண்டு எழத் தொடங்குகிறது. ஆண்டாள் பாசுரங்களில் தவழும் மயக்கம்!
நிலத்தைத் கிளர்ந்து எழும் நீர் போல ராகதேவன் இச்சையின் சுருதியை இசையில் கூட்டுகிறார்.
இடங்கொண்டு விம்மி,
இணை கொண்டு இறுகி,

இளகி முத்து வடங்கொண்ட
கொங்கை மலை கொண்டு,
இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை
நலம் கொண்ட நாயகி,
நல் அரவின் படம்கொண்ட அல்குல்
பனி மொழி, வேதப் பரிபுரையே!
வேதப் பரிபுரையே!
கொங்கை மலை கொண்டு,
இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை
நலம் கொண்ட நாயகி,
நல் அரவின் படம்கொண்ட அல்குல்
பனி மொழி, வேதப் பரிபுரையே!
வேதப் பரிபுரையே!
மனத்தால் இளகி உருக, முத்து வடங்கள் வந்து மேலாடும் மலைகள் போன்ற அந்தத் திருக் கொங்கைகளால் ஈசனின் வலிய நெஞ்சத்தையும் அசைத்துப் பார்க்க வல்லவளே! என பொருத்தமான இடத்தில் அபிராமி அந்தாதி இணைந்து கொள்கிறது!
நல்ல பாம்பு ஒன்று படமெடுத்தாற் போல் உள்ள அல்குலை உடையவளே! பனி போன்று குளிர் மொழி கொண்டவளே!
கிளர்ந்து எழும் பாவனி ராகம் நல் அரவம் போல் காதலின் நரம்புகளில் கொடிபோலப் உள்ளூரப் பிணைந்து கொள்கிறது.
இம்முறை கரைதலின் கீழ்ஸ்தாயிலிருந்து பிரவாகமெடுக்கும் உச்சஸ்தாயிற்குள் யேசுதாஸ் சஞ்சரிக்கிறார்.
பார்த்த விழி பார்த்த படி…
இளையராஜா, கமல், யேசுதாஸ், வாலி! ❤️
உங்கள் கோப்பைகளில் அமுதின் பரிபூரணம் ததும்பட்டும்!

Comments
Post a Comment