காதல்.. அந்தந்த நேரத்துப் பேருண்மை!

 

கடந்துபோன அனுபவங்களின் வழியே புரிந்துகொள்ள முடியாத ஒன்று காதல் மட்டும்தான். 

வெளிப்படுத்துவதின் தீவிரம் எப்போதும் எனக்குள் இயற்கையின் சீற்றம் போலவே கிளர்ந்து எழுகிறது.

அதேவேளை, வசந்தம் நிரந்தரமற்றது என இயற்கை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

என் தீவிரத்தின் முன் நான் மண்டியிடுகிறேன். 

ஒரு மலரின் பருவங்களை பொறுமையுடன் அவதானிக்கப் பழகுகிறேன்.

காதல் என்ன என்பது குறித்து என்னிடம் இன்று ஒரே ஒரு பதில் மட்டுமே மீதம் இருக்கிறது.

காதல்.. மலர்தலைப் போலவே அந்தந்த நேரத்துப் பேருண்மை!

என்னை உயிர்போடு வைத்திருக்கும் அந்த பேருண்மையின் நறுமணத்தையே உனக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்!


Comments